மின் தகன மேடையில் வாத்தியாரின் உடல் கிடத்தப்பட்டு, மார்பில் கற்பூரத்தைக் கொளுத்தி வைக்கவும் நா.முத்துக்குமாரிடம் கதறத் தொடங்கினேன்.
‘முத்து! ஸாருக்கு சுடும்டா. வேண்டாம்டா’.
அவரது டிரேட்மார்க் ஃபிடம் கேஸ்ட்ரோ தொப்பியுடன் சேர்த்து அவரது தலையைத் தொட்டு வணங்கிய அடுத்த நொடியில் சரேலென வாத்தியாரை உள்ளே இழுத்துக் கொண்டது, அந்த யந்திரம். கதறலும், கேவலுமாக அழுது மயங்கிச் சரிந்தேன். இயக்குனர் பாலாஜி சக்திவேல் தாங்கிக் கொண்டார். யார் யாரோ என்னைக் கடத்தி அங்கிருந்து நகர்த்தினர்.
‘நீங்களே இப்பிடி கண்ட்ரோல் இல்லாம அழுதீங்கன்னா என்னண்ணே அர்த்தம்?’
வெற்றி மாறன் கடிந்தான்.
‘நீங்க அழுது எங்க எல்லாரயும் அழ வைக்கிறீங்க. மொதல்ல இவர பத்திரமா வெளியெ கூட்டிட்டுப் போங்க.’
யாரிடமோ சத்தமாகச் சொன்னான், இயக்குனர் ராம்.
’வாங்க சுகா’. இயக்குனர் சசி கைப்பிடித்து வெளியே கொணர்ந்தார்.
‘சுகா! இந்தாங்க. கொஞ்சம் மோர் சாப்பிடுங்க’.
இயக்குனர் விக்ரமன் கொடுத்தார்.
‘!என்னண்ணே இது? சின்னப் புள்ள மாதிரி அழுதுக்கிட்டு?’
தோளைப் பிடித்து அணைத்துச் சொல்லும் போதே அடக்க முடியாமல் அழுது என் மார்பில் சாய்ந்தான், இயக்குனர் சீனு ராமசாமி.
மாலையில் ராஜா ஸாரிடமிருந்து ஃபோன்.
‘என்னய்யா? பத்திரமா அனுப்பி வச்சுட்டீங்களா?’
பதில் சொல்லாமல் அழுதேன்.
புரிந்து கொண்டு மறுமுனையில் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு,
‘சரி சரி. நாளைக்கு வா’ என்றார்.
நாளைக்குப் போய்ப் பார்க்க வேண்டும். இனி அவர்தானே ’வாத்தியார்’!
B.M is dead
long live B.M
Nature has taken away a good human being , teacher, book reader and writer. Suga and all students of Balu Mahendra, took care of their guru on the last days and you made him proud. With heavy heart….
Ravi
ஆழ்ந்த அனுதாபங்கள்.
உங்களின் உணர்வுகள் எனக்குள்ளும் நிரம்பி இருக்கின்றன. வார்த்தைகளற்று கனமாகத் தொங்கும் மௌனத்தினூடே நான் இப்போது இருக்கிறேன்.
வாத்தியார் விட்டு சென்ற பணிகளை அவரின் மாணவர்கள் தொடர்ந்து செய்து அவருக்கு மரியாதை செய்வீர்கள்.உங்கள் துக்கத்தில் நாங்களும் பங்கேடுகிறோம்.ஜோ
SUGA JUST READ THE BELOW POST OF YOURS. COINCIDENTLY IN MATCHES WITH THIS… I THINK YOU MAY UNDERSTAND WHAT I MEANT TO SAY….
May the peace that comes from the memories of love shared comfort you now and in the days ahead.
தேறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை சுகா..தமிழ் திரைப்படத்துக்கான ஒரு அடையாளம் பாலு மகேந்திரா அவர்கள்..என்ன சொன்னாலும் முள்ளும் மலரும் ஷோபா “செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்…”பார்க்கும் போது என்னாலும் கண்ணீரை அடக்க முடியலயே சுகா…
மறைந்தது உடல் மட்டுமே,அவர் படைப்புகளில் பாலு எனும் அற்புதக்கலைஞர் இன்னும் வாழ்கிறார். அவர் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனைகள்.
Suka I started gettig close to everything BM sir only through your articles and started following his blog as well and felt very close to him. I donno what to say but namma ayya avaru… enakku Tamila type panna varala… itha vaasipeengalanu kooda theriyathu but first yr padikkara en akka ponnuku kooda BM sirum IR sir musicum pidikkum unga eluthu moolama..neenga aalahi pakka avaru illaye…
வார்த்தைகள் இங்கு எதுவும் இப்போது செய்யாது .காலம்தான் உங்களுக்கு மருந்து .
Anbulla suga sir, ninga entha thalathil padaipugal seithalum, pagirndhalum, adhai kandipaga padithu , kettu magizhum rasigan naan. Moongilin moochin osai dhan ungalai arimugam seidhadhu enakku. Ungalidam pesa vendum endru aasai dhan aanal muyarchikkavillai, indru indha blog ennai kanneril karaithu vittadhu. Idhai mattumavadhu sollividalam enbadharku than ingu padhivu seidhen.Nandri
அன்புள்ள சுகா, உங்களோட அனுபவங்களை பகிர்ந்ததை படித்த போது நானும் திரு. வாத்தியார் அவர்களோடு வாழ்ந்த ஒரு மன நிறைவை அடைந்தேன். அற்புதமான பதிவு, மிக ஆழமான அன்புடனான பதிவு. வீடியோ இணைப்பை திரும்ப திரும்ப பார்த்தேன், ஏன் என சொல்லத்தெரியவில்லை. அடக்கமான இதயம் அனைவரின் அன்பையும் பெறும். மிக்க நன்றி.
very emotional writing. May Balu sir’s soul rest in peace.
இந்த கட்டுரையை வாசிக்கும் வரையிலும் பாலுமகேந்திரா அவர்கள் இறப்பு ஒரு செய்தியாகவே இருந்தது, ஒரு உன்னத கலைஞனின் இறுதி யாத்திரை யை இத்தனை உனைர்ச்சிப்பெருக்கோடு சொன்னது கண்களில் நீர் கோர்த்தது.
பிரிவால் வருந்தும் உங்களுக்கு ஆறுதல்கள்.
dnRrjg http://www.FyLitCl7Pf7kjQdDUOLQOuaxTXbj5iNG.com